கோவையில் 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கோவை: கோவையில் இறந்தவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள் என 5 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதி இப்பணிகள் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 11ம் தேதி வரை படிவத்தை ஒப்படைக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Advertisement

கோவை மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த முறை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 32,25,198 வாக்காளர்கள் இடம் பிடித்திருந்தனர்.

இதனிடையே வாக்காளர் திருத்தப் பணிகளின் முடிவில் பட்டியல் திரும்பப் பெற்ற பின்னர் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் இதில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, உயிரிழந்தவர்கள் 1,13,592 பேர், கணக்கெடுப்பின் போது இல்லாதவர்கள் 76,096 பேர், முகவரி மாறிச் சென்றவர்கள் 2,91,928 பேர், இரண்டு முறை பட்டியலில் இடம் பெற்றவர்கள் 20,245 பேர் என மொத்தம் 5,02,256 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தற்போதைய நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் 27,22,942 பேர் மட்டுமே தகுதியான வாக்காளர்களாக உள்ளனர். இப்பணிகளின் முடிவில் கோவையில் 15.57% வாக்காளர்கள் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நீக்கப்பட்டவர்கள் பட்டியல் குறித்து அனைத்து அரசியல் கட்சியினரு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஆட்சேபணை இருந்தால் மீண்டும் வாக்காளர்களை சேர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆன படையப்பா திரைப்படம்- கோவையில் ரசிகர்கள் உற்சாகம்- தமிழக அரசுக்கு முன்வைத்த கோரிக்கை…

கோவை: 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படத்தை கோவையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கண்டு களித்தனர். 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp