கோவை: கோவையில் சமீப நாட்களாக வெயில் மிகுதியாக உள்ளது. இதனால் மாநகராட்சி சார்பில் நகரில் அமைத்துள்ள சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது.
மின் உற்பத்தியை பெருக்கவும், அதனால் ஏற்படும் மின் கட்டண செலவை ஈடுகட்டவும் சோலார் பேனல் திட்டத்தை கோவை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் 140 முதல் 154 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது.
Read Also: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… கோவை முதல் மதுரை வரை யார் யார்?
அதாவது தினமும் 693 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். இது தவிர உக்கடம் புல்லுக்காட்டில் 3.6 மெகா வாட் திறன் கொண்ட சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி அதிகரிப்பு
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகராட்சியின் மின்சார தேவையை பூர்த்தி செய்து, மின் செலவை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக வெயில் காலங்களில் சூரிய ஒளி அதிகமாக கிடைப்பதால், சோலார் பேனல்கள் மூலமாக அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
Read Also: கோவையில் சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு!
ஒட்டு மொத்த உற்பத்தி கோடை காலங்களில் இரண்டு மடங்கு அதிகரிக்கும். சமீப காலமாக கோவையில் வெயில் அதிகரித்து வருவதால் மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

