சினிமா நடிகரின் கட்சியை முடித்து விட்ட தொகுதி கோவை தெற்கு தொகுதி- வானதி சீனிவாசன் பெருமிதம்…

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி தெற்கு தொகுதி என்று வானதி சீனிவாசன் பெருமிதம் கொண்டார்.

பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், நிர்வாகிகளிடம் பேசிய போது கோவை தொகுதி என்பது மிகப்பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி என்று கமலை பெயர் குறிப்பிடாமல் சாடினார். மேலும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையே முடித்த தொகுதி இந்த தொகுதி என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் வாக்காளர் பட்டியல் பணிகளில் அடுத்த ஒரு மாதம் தீவிரமாக செயல்பட அறிவுறுத்தல் வழங்கி வருகிறோம். திமுக SIR பணிகளை எதிர்பது போன்று, மறைமுகமாக பணிகளை ஆதரித்து பணி செய்து வருகின்றனர் என்றார். எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் நேர்மையானதாக, உண்மையாக இருக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை ஒரு அரசியல் கட்சியாக ஆதரித்து அதற்கான பணியை செய்து வருகிறோம் என்றார்.

2026 தேர்தலுக்கு தயாராகவும் சூழலை SIR ஏற்படுத்தி கொடுத்துள்ளது இதன் மூலம் மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் அதிகளவு வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனை அரசியல் கட்சி பூத் கமிட்டியினர் சரியாக தான் நீக்கப்பட்டுள்ளனரா என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.

பல்வேறு இடங்களில் எங்கள் கட்சியினர் பெயர்களே முகவரி மாற்றம் செய்ததால் நீக்கம் செய்துள்ளனர் இதை ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார். கட்சி பாகுபாடு இன்றி பணிகள் செய்ய வேண்டும், பெயர்களை நீக்கும் நடவடிக்கை இருக்க கூடாது, பணி நீட்டிப்பு என்பது தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றார்
கே.என் நேரு மீது குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது அரசு சார்ந்த அமைப்பு வலியுறுத்துகிறது என கூறினார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் லஞ்சம் வாங்காமல் பணி செய்கிறார்களா? என கேள்வி எழுப்பிய அவர் ஜெயிலுக்கு போன அமைச்சர்களை ஏன் இன்னும் வைத்து உள்ளார்கள், குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் சரியாக விசாரிக்க வேண்டும் என்றார். செந்தில் பாலாஜி திடீரென புனிதராக மாறிவிட்டார் என்றும், அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

மேலும் திமுக ஊழலை ஆதரிக்கின்றது என்றும், தேர்தல் வருவதால் கூடுதலாக பெண்களுக்கு உரிமை தொகை வழங்கி உள்ளனர், திராவிட மாடல் அரசு புகழ்ந்து பேச , பணத்தை திமுக அரசு செலவு செய்கிறது. ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றார்.
அரசாங்க பெண் அதிகாரியை மேடை ஏற்றுவதும், திமுக அரசு காரணம் போன்று நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர், சினிமா நடச்சத்திரங்களை வலுக்கட்டாயமாக மிரட்டி, திமுக அரசுக்கு புகழ்பாட செய்கின்றனர் என்றார்.

இது புதியது கிடையாது என கூறினார். அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 53 இடங்கள் கேட்கப்படுவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு , ஏதாவது ஒரு செய்தி எங்களை பற்றி எழுத வேண்டுமே அதுக்காக தான் எழுதுகிறார்கள் . எத்தனை தொகுதி, யார் வேட்பாளர் என்பதை எங்கள் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்றார். மாநில தலைவர் மற்ற குழுவினர் தங்கள் கருத்துகளை மேலிடத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

அதனால் இடையில் ஏதாவது எழுத வேண்டியது தான் என பதிலளித்தார். கேரளாவில் வளர்ச்சிக்கு பாஜகவின் தேவை வேண்டும் என மக்கள் உணர ஆரம்பித்து உள்ளார்கள் என்பது தான், தற்போதைய வெற்றி என்றார். பொறுப்பு இல்லாத அரசுக்கு எத்தனை பொறுத்தால் என்ன? என்றார்.

Recent News

Video

Join WhatsApp