கோவை மாணவி வழக்கு; கொடூரர்களின் புகைப்படம் வெளியீடு!

கோவை: கோவை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையம் அருகில் கடந்த மாதம் 2ம் தேதி, இரவு காரில் காதலனுடன் பேசிக் கொண்டு இருந்த, கல்லூரி மாணவியை சிவகங்கை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ்(30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் ( 28), மற்றும் இவர்கள் உறவினரான தவசி என்ற (குணா) ஆகியோர் இருட்டான பகுதிக்கு கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.

Advertisement

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மறுநாள் 3ம் தேதி கோவை துடியலூர் அருகே சுட்டுப் பிடித்தது கோவை போலீஸ்.

தொடர்ந்து மூவரும் சிறையில் அடைக்கபப்ட்டுள்ள நிலையில், கடந்த மாதம் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் நவம்பர் 2 ஆம் தேதி மாணவியை பலாத்காரம் செய்வதற்கு முன்பு, சேராப்பாளையம் அருகே தேவராஜ் வயது (55) என்பவரை அடித்து கொலை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.

Advertisement

இதனிடையே மூன்று பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் காவல் துறையினர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அத்துடன் 400 பக்க ஆவணங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் 13 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக கருப்புசாமியும், இரண்டாவது குற்றவாளியாக அவரது தம்பி கார்த்திக்கையும், மூன்றாவது குற்றவாளியாக தவசியையும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனிடையே மூவரது புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Recent News

விதை சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம்- கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: விதைச்சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு விதைச்சான்று...

Video

Join WhatsApp