கோவை: கோவை மாவட்டத்தில் இந்த வாரம் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 31.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
இன்று முதல் ஜூலை 19ம் தேதி வரை, கோவையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Advertisement

குறிப்பாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (ஜூலை 16,17) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் குறைந்தபட்சம் 22–23 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதிகபட்சம் 31–33 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read the Coimbatore weekly weather report