கோவை வாசிகளே அடை மழைக்கு ரெடியா இருங்க… 7 நாட்களுக்கான வானிலை அறிக்கை!

கோவை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை ரிப்போர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனை இங்கே காணலாம்.

இன்று (வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர்)

Advertisement

கோவையில் இன்று பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்றைய வெப்பநிலை அதிகபட்சம் 35°C, குறைந்தபட்சம் 23°C ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாளை (சனி, 11 அக்டோபர்)

Advertisement

வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யலாம். வெப்பநிலை அதிகபட்சம் 35°C, குறைந்தபட்சம் 23°C ஆக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை (12 அக்டோபர்)

கோவையில் பகலில் வெயிலும், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை மழையும் பெய்ய வாய்ப்பு அதிகம். வெப்பநிலை மாற்றமின்றி 35°C / 23°C ஆகவே இருக்கும்.

திங்கட்கிழமை (13 அக்டோபர்)

வாரத்தின் தொடக்கத்தில் பகலில் வெயிலாக இருந்தாலும், இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம். வெப்பநிலை 34°C / 23°C என பதிவாகலாம்.

செவ்வாய்க்கிழமை (14 அக்டோபர்)

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சம் 34°C, குறைந்தபட்சம் 23°C.

புதன்கிழமை (15 அக்டோபர்)

மழை தொடரும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம். வெப்பநிலை 34°C / 23°C இருக்கும்.

வியாழக்கிழமை (16 அக்டோபர்)

கோவையின் சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை 34°C / 23°C என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் இன்று முதல் வரும் 13ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக்க் கொள்ளலாம்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group