Coimbatore weather: கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் இன்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.6°C ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 31.8°C ஆகவும் பதிவாகியுள்ளது.
வாராந்திர முன்னறிவிப்பு ( நாளை முதல் 14ம் தேதி வரை):
Coimbatore weather
கோவையில் நாளை (ஜூலை 9ம்) வானம் மேகமூட்டமாக காணப்படும். வெப்ப நிலையி 22°C – 33°C (டிகிரி செல்சியஸ்) வரை பதிவாகலாம்
ஜூலை 10ம் தேதி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அன்றைய நாளில் வெப்பநிலை 22°C – 33°C வரை பதிவாக வாய்ப்புள்ளது.
இதே போல், ஜூலை 11ம் தேதியும் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.
ஜூலை 12ல் மழைக்கு வாய்ப்பில்லை. வானம் மேகமூட்டமாகவே இருக்கும். அன்றைய தினம் வெப்பநிலை குறைந்தது 22°C முதல் அதிகபட்சம் 33°C வரை பதிவாக வாய்ப்பு.
வரும், ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை 22°C – 32°C வரை பதிவாகக்கூடும்.
இவ்வாறு வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பில் வேறுபாடுகள் இருப்பின் அந்த அறிவிப்பு மீண்டும் வெளியிடப்படும். பொதுமக்கள் இந்த முன்னறிவிப்பின் படி தங்கள் பயண திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.