கோவை: இந்த வாரம் 3 நாட்கள் கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பம் சற்றே தணிந்து காலையும், இரவும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு இந்த சீதோஷண நிலை நீடிக்கும் என்றும், தென்மேற்கு காற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படும் நிலையில், கோவையில் இந்த வாரம் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் மே 14, 15ம் தேதிகளில் கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.