Coimbatore weather report: கோவையில் இன்று (ஏப்ரல் 3ம் தேதி) முதல், ஏப்ரல் 9ம் தேதி வரைக்குமான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்த விவரத்தை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்:-
ஏப்ரல் 3: கோவையில் இன்று குறைந்தது 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 4: நாளை குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 5: கோவையில் நாளை மறுநாள் குறைந்தது 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
ஏப்ரல் 6: குறைந்தது 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அன்றைய தினம் ஓரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 7: கோவையில் வரும் 7ம் தேதி குறைந்தது 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
ஏப்ரல் 8: குறைந்தது 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. பல்வேறு மித மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 9: கோவையில் வரும் 9ம் தேதி குறைந்தது 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அன்றைய தினம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்புகள் தொடர்ந்து மாற்றமடையலாம். எனவே, அடுத்த புதுப்பிக்கப்பட்ட செய்தியையும் படித்து வானிலை முன்னறிவிப்பைத் தெரிந்து கொள்ளலாம்.