கோவை: கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் டிசம்பர் 12 முதல் 16 வரை பெரும்பாலும் பகுதி மேகமூட்டத்துடன் கூடிய வானிலை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பகலில் வெப்பம் சற்றே அதிகமாக இருந்தாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியசுக்குள் இருக்கும் நிலையில், இரவு குறைந்தபட்சம் 21 முதல் 22 டிகிரியாக குறையும்.
டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளிலும் இதே போன்ற வானிலை தொடரும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், காலை மற்றும் இரவு நேரங்களில் சற்றே குளிர்ச்சியை உணரக்கூடிய சூழல் நிலவும். குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.
இதேபோல் டிசம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, அதிகபட்சம் 31 டிகிரியும், குறைந்தபட்சம் 20 டிகிரியும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நாளிலும் குளிர் இருக்கும்.
16ம் தேதி வானில் மேகமூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது
எனவே அடுத்து வரும் 5 நாட்களில் வாரத்தில் 14, 15, 16ம் தேதிகளில் கோவை இன்னும் கொஞ்சம் ஜில்லென்று இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வரும் வாரங்களில் இன்னும் குளிர் அதிகரிக்கப்போகிறது.



