Coimbatore weather report: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

Coimbatore weather report: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதன்பிறகு வானம் மேகமுட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் சனிக்கிழமை முதல் வரும் திங்கட்கிழமை வரை சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நாட்களில் அதிகபட்சம் 30°C | குறைந்தபட்சம் 22°C வெப்ப நிலை பதிவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வரும் செவ்வாக்கிழமை ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு மட்டும் வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 31°C | குறைந்தபட்சம் 22°C வெப்ப நிலை பதிவாக வாய்ப்பு.

வரும் புதன் முதல் வெள்ளிக்கிழமை வரை கோவையில் மழை வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குறைந்தபட்சம் 21°C முதல் அதிகபட்சம் 31°C வரை வெப்பம் பதிவாகலாம்.

வாசகரகள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

வானிலை மையத்தின் கணிப்புகள் மாறுதலுக்கு உட்படவை. வானிலை மையத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை நமது தளத்தில் படிக்க இணைந்திருங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை…

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம்...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.