கோவை வானிலை: அடுத்த 7 நாட்கள் எப்படி?

கோவை வானிலை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

சனி (செப்டம்பர் 6):

கோவை மாவட்டத்தில் இன்று வானம் பகுதி மேகமூட்டத்துடன் கானப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°C, குறைந்தபட்சம் 23°C.

வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை தொடரும். அதிகபட்ச வெப்பநிலை 32°C, குறைந்தபட்சம் 23°C.

ஒன்று, இரண்டு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33°C, குறைந்தபட்சம் 22°C.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°C, குறைந்தபட்சம் 23°C.

புதன்கிழமை கோவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாளில் அதிகபட்ச வெப்பநிலை 33°C, குறைந்தபட்சம் 23°C பதிவாகலாம்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

மழைக்கு வாய்ப்பு குறைவு. வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33°C, குறைந்தபட்சம் 23°C.

வானம் பகுதி மேகமூட்டத்துடன் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°C, குறைந்தபட்சம் 23°C.

இந்த வாரம் கோவையில் வெப்பநிலை 32°C முதல் 34°C வரை நிலைக்கும் நிலையில், இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 22°C முதல் 23°C வரை பதிவாகும். மழை பெரும்பாலும் லேசாகவும் இடியுடன் கூடியதாகவும் இருக்கும்.

இவ்வாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையத்தின் கணிப்புகள் மாறுபடலாம். அப்படி மாறும் போது, அந்த புதிய தகவல்கள் நமது தளத்தில் வெளியிடப்படும். இணைந்திருங்கள் வாசகர்களே.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...