அழகிப்போட்டியில் மகுடம் சூடிய கோவை பெண்!

கோவை: க்ளாமர் குருகிராமம் (Glamour Gurgaon) நடத்திய அழகிப் போட்டியில் “The Face of South” என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த பெண்மணி.

க்ளாமர் குருகிராமம் (Glamour Gurgaon) சர்வதேச அளவிலான அழகிப் போட்டி டிசம்பர் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை இலங்கையில் நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட வெவ்வேறு நாடுகளில் இருந்து பல பெண்கள் பங்கேற்றனர்.

மொத்தம் 24,000 விண்ணப்பங்களில், 125 பேர் மட்டும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 19 பெண்கள் பல்வேறு பட்டங்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.

அந்தப் பட்டியலில், The Face of South என்ற விருது கோவையைச் சேர்ந்த சஹானா பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து சஹானா கூறுகையில், “கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணாக, சர்வதேச மேடையில் நின்று தென்னிந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று என் கனவிலும் நினைத்ததே இல்லை. என் மொழி, மக்கள், கனவுகள் என அனைத்தையும் நான் என்னுடன் எடுத்துச் சென்றேன்.

இந்த வெற்றி எனது மட்டும் அல்ல ஒவ்வொரு பெண்ணுக்குமான வெற்றி. என்றார் சஹானா.

Recent News

Video

Join WhatsApp