கோவையில் புற்றுநோய் பரிசோதனைக்கான வாகனம்- ஆட்சியர் துவக்கி வைப்பு…

கோவை: கோவையில் புற்றுநோய் பரிசோதனைக்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை மூலம் செயல்படுத்தப்படும் புற்றுநோய் பரிசோதனை திட்டத்திற்கு, ரூட்ஸ் நிறுவனத்தின் சார்பில் CSR நிதியின் மூலம் வழங்கப்பட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை மூலம் செயல்படுத்தப்படும் புற்றுநோய் பரிசோதனை திட்டத்திற்கு, ரூட்ஸ் நிறுவனத்தின் சார்பில் CSR நிதியின் மூலம் வழங்கப்பட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் சுமதி மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, ரூட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர் டாக்டர் கவிதாசன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாகனத்தின் மூலம் சமூக அளவிலான கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய்களான ஆரம்ப நிலையில் கண்டறியும் திட்டத்தின் கீழ்(OCS) சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலைய அளவில் பரிசோதிக்கப்பட்ட பயனாளிகளில் நோய்க்கான அறிகுறிகள் தென்படும் மருத்துவ பயனாளிகளை மேல் சிகிச்சைக்காக வாரம் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

அதே போன்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் ஆட்டோவில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சியர் ஓட்டும் பணியை துவக்கி வைத்தார்.

Recent News

இண்டிகோ விமானங்கள் ரத்து- கோவையில் பயணிகளுக்கு கட்டணத்தொகை Refund…

கோவை: கோவையில் இண்டிகோ விமானம் ரத்து கட்டணங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பயணிகள் புக்கிங் செய்த கட்டணங்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாகவே நாடு...

Video

Join WhatsApp