கோவையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

கோவை: கோவையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.110 உயர்ந்துள்ளது.

அதன்படி, கோவை வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1685.50 வில் இருந்து ரூ. 110 உயர்ந்து ரூ.1795.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்வால் ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. கடந்த மாதம் ரூ. 10.50 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Recent News

Video

Join WhatsApp