கோவை: கோவையில் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடிய வாகனங்களை வாடகை பயன்பாட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போக்குவரத்து வட்டார அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டத்தில் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாடகை பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் இன்று கோவையில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திய குற்றத்திற்காகவும் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை தனியார் செயலியின் மூலம் வாடகைக்காக இயக்கியதற்காகவும் 12 இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்பட்ட வாகனங்கள் மீது ரூபாய்
1,80,000 அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற சோதனைகள் தொடந்து நடத்தப்பட்டு என்றும் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.