கோவை: புதுச்சேரி முதலமைச்சர் கையால் வித்யா ஸ்ரீ விருது வாங்கிய ராமச்சந்திரனுக்கு கோவை வீரபாண்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை மையமாகக் கொண்டு அகில உலக யோகா சோவாஸ் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளையின் மாநில செய்தி தொடர்பாளராக
ராமசந்திரன் இருந்து வருகிறார். இவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுஅமைதி சமாதானம், மத நல்லிணக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும்
சாலைப் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி போன்றவற்றை வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையேசிறப்பாக சமூக சேவை செய்தற்காக புதுச்சேரி அன்னை இந்திரா
காந்தி கிராம முன்னேற்ற சங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீ
“வித்யா ஸ்ரீ” விருதை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதற்கான பாராட்டு விழா கோவை வீரபாண்டி அருகே செல்வபுரம் அருகில் உள்ள சாய்பாபா ஆலயத்தில், ஸ்ரீ சாய் சேவா பரிவார் அமைப்பின் சார்பில்
நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனத் தலைவர் சாய் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பின் பொறுப்பாளர் சாய் ஈஸ்வரன், யோகேஷ்,
சாய்ராமமூர்த்தி, ராமகிருஷ்ணன், முரளிகோபால், சுரேஷ்குமார், மரகதம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.