கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் AITUC கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியம் 6000 ரூபாய் என்பதை சட்டமாக்க வேண்டும், உடனடியாக வாரிய முடிவு படி 2000 ரூபாய் என்பதை வழங்க வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு கொடுக்க வேண்டும் மானியம் கொடுக்க வேண்டும்
தினசரி வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், வெளி மாநில தொழிலாளர் வருகைக்கு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், கல்வி செலவு முழுவதையும் வாரியம் மூலம் வழங்க வேண்டும்
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு நிதி வழங்க வேண்டும், நலவாரிய நிதியை விரயம் ஆக்க கூடாது, நல வரியை 3% வசூல் செய்ய வேண்டும், மாவட்டங்களின் நலவாரிய அலுவலகங்களில் ஏஜென்டுகளின் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



