கோவையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- கோரிக்கை என்ன?

கோவை: பொங்கலுக்கு போனஸ் வேண்டுமென கூறி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி HMS சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு HMS கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் இன்று தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ஏழாயிரம் ரூபாய் போனஸ் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 60 வயது பூர்த்தி ஆகியவர்களுக்கு ஓய்வூதியம் தொகையாக குறைந்தபட்ச 6 ஆயிரம் வழங்க வேண்டும், மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கோவை மாவட்டத்தை சேர்ந்த HMS தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். HMS மாநில செயல் தலைவர் ராஜாமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து பேட்டியளித்த இராஜாமணி தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மத்திய அரசு உடனடியாக புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திய அவர் நிலையெனில் டெல்லியில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தியதை போன்று அனைத்து தொழிலாளர் சங்கத்தையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

Recent News

Video

Join WhatsApp