கோவை அருகே U turn செய்த போது டிவைடரில் சிக்கிய கண்டெய்னர் லாரி

கோவை: கோவை அருகே U Turn செய்ய முயன்ற போது டிவைடரில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை- பொள்ளாச்சி சாலையில் சிட்கோ மேம்பாலத்திற்கு அடியில் கண்டெய்னர் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

கோவை- பொள்ளாச்சி சாலையில் ஏராளமான பள்ளி கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே செல்கின்றனர்.

இந்நிலையில் சிட்கோ அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் கண்டெய்னர் லாரி ஒன்று U Turn எடுக்க முயன்ற பொழுது அந்த லாரி நீளமாக இருந்ததால் மேம்பாலத்தின் கீழ் இறங்கும் இடத்தில் இருந்து சிமெண்ட் டிவைடர் இடையே சிக்கி உள்ளது.

இதன் காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அந்த சிமெண்ட் டிவைடர்களை அகற்றி லாரி செல்வதற்கு வழிவகை செய்தனர்.

அதன் பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் வேலைகளுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp