Header Top Ad
Header Top Ad

மத்திய அரசை கண்டித்து கோவையில் கொ.ம.தே.க ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் மத்திய அரசை கண்டித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் கட்சியினரின் ட்ரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது…

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து துவக்கிட வலியுறுத்தியும் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவிட வலியுறுத்தியும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் உடனடியாக துவக்கிட வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனை உடனடியாக நிறுவிட வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயிலை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து பேட்டி அளித்த அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நித்தியானந்தன், மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக துவக்கி முடித்திட வேண்டும் என்றும் அதனை பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என கோரினார்.

Advertisement

இந்த பகுதியில் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் பரவிக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சியினர் அனுமதியின்றி டிரோன் கேமராவை பறக்க விட்டதால் காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர்.

Recent News