மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் இணைப்பு அட்டை- கோவை வந்தடைந்தார் உதயநிதி ஸ்டாலின்

கோவை: மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் இணைப்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார்.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2000 கோடி ரூபாய் மதிப்பில் வங்கிக் கடன் இணைப்பு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது.

கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் ஆகியோர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டையை வழங்குகின்றனர்.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். தொடர்ந்து சாலைமார்க்கமாக சேலம் புறப்பட்டார் கோவை வந்த அவருக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரத்து செய்யப்பட்ட குரூப் 2,2A தேர்வு இன்று துவங்கியது…

கோவை: கோவையில் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் துவங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2A தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல்...

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...