கோவை: கோவையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக திகழும் லங்கா கார்னர் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள குழி வாகன ஓட்டிகளை சிரமம் அடையச் செய்துள்ளது.
கோவை டவுன்ஹால் – லங்கா கார்ணர் இணைக்கும் சாலையின் நடுவே சுமார் முன்றடி ஆழம் கொண்ட குழி ஒன்று சாலையின் நடுவே ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை சிரமமடைய செய்ந்துள்ளது.
கலெக்டர் முதல் கார்பரேஷன் கமிஷனர் வரை வி ஐ பி சாலை பள்ளி கூடம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை அனைத்தும் இணைக்கும் பிரதான சாலை இது சாலையின் நடுவே அபாய குழியில் நிறைந்து நீர் தேங்கி உள்ளது. இதனால் குழியின் ஆழம் தெரியாமல் சில சமயங்களில் வாகனங்கள் குழிக்குள் இறங்கி விடுகிறது.
Advertisement

இதுபோன்று பல்வேறு குழிகள் கோவை நகரில் பல்வேறு இடங்களில் இருப்பதால் அரசு துரித நடவடிக்கை எடுத்து இதனை சரி செய்ய வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.