கோவை: இட்லி கடை ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு கோவை வந்தடைந்தார் நடிகர் தனுஷ்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதன் டிரைலர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நடிகர் தனுஷ் கோவை வந்தடைந்தார். அவரது வருகையை முன்கூட்டியே அறிந்த தனுஷ் ரசிகர்கள் கோவை விமான நிலையத்தில் திரண்டு அவர் வரும் பொழுது உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோஜா பூ மாலை, தனுஷின் ஓவிய புகைப்படம், ஆகியவற்றை அளித்து தனுஷை வரவேற்றனர்.
பிறகு காரில் ஏறிய தனுஷ் காரில் இருந்த வண்ணம் ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தபடி புறப்பட்டார்.