தீபாவளி பண்டிகை- கோவையில் களைகட்டும் இறைச்சி விற்பனை

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளில் அதிகமான மக்கள் இறைச்சிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

தீபாவளி பண்டிகை இன்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதிகாலை முதலில் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டமானது அதிக அளவு காணப்படுகிறது.

Advertisement

கோவையில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இறைச்சிகளை வாங்க வரும் மக்கள் அனைவரும் வரிசையாக நின்று அவர்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி செல்கின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு ஆட்டு இறைச்சி அதிகமாக விற்பனையாகும் என்பதால் இறைச்சி கடைக்காரர்களும் அதிக அளவு இறைச்சிகளை விற்பனை செய்து வருகின்றனர். கோவையைப் பொறுத்தவரை ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோழி இறைச்சி கிலோ 250 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இறைச்சி கடைகளில் வரிசையாக நின்று வாங்கி செல்வதால் தள்ளுமுள்ளு இல்லாமல் வாங்கி செல்ல முடிவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News