கோவை: கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் இளநீர் வெட்டி கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
அதன்படி இன்று சாயிபாபா காலனி பகுதி கழகத்திற்கு உட்பட்ட கருப்பராயன் கோவில், சங்கனூர், தண்டல் ராமன் வீதி, கண்ணப்ப நகர், காமாட்சி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அப்பகுதியில் உள்ள இளநீர் கடைக்கு சென்ற அவர், இளநீர் வெட்டிக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பேசிய வேட்பாளர் செந்தமிழ் செல்வன், திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கி கூறியதுடன், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் வழங்கி உறுதி செய்யப்படும் என கூறினார்.

