திமுக மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது- கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்ட விஷயம்…

கோவை: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக கவனமாக கையாண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் திமுக சார்பில் வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற செயற்குழு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

Advertisement

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தொடங்கிட வேண்டும். இதற்கு முன்பு எடுத்த வாக்குகளை விட கூடுதலாக வாக்குகளை பெறுவதற்கு ஆலோசித்து செயல்பட வேண்டும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SIR க்கு முன்பு பணிகளை முடித்து வைத்திருக்க வேண்டும், இந்த 30 நாட்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் அதுதான் முதலமைச்சர் மு க ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க செய்யும் என்றார். இது திராவிட மண் இங்கு வேறு யார் வந்தாலும் காலூன்ற முடியாது என்ற தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும் என கூறினார்.

Advertisement

முதல்வர் அவிநாசி மேம்பாலத்தை திறந்து வைத்த பிறகு சிலர் சென்று இனிப்புகளை வழங்கினார்கள் என்றும் அவர்களுக்கு கூச்சமே இல்லை, யார் செய்த திட்டத்திற்கு யாரோ இனிப்புகளை வழங்கி மக்களிடம் ஒரு மாயையை உருவாக்க பார்க்கிறார்கள் என்றும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இனிவரும் நாட்களில் பெரியார் நூலகம் செம்மொழி பூங்கா என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்வுகள் கோவையில் நடைபெற்று, கடந்த சட்டமன்றத் தேர்தலை விட அதிகமான வாக்குகளை பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

SIR யை பொறுத்தவரை முதல்வர் தொடர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார், பீஹார் தேர்தலில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் அது போன்ற ஒரு சூழல் தமிழ்நாட்டில் வந்து விடக்கூடாது அவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளை திமுகவும் திமுக தலைவரும் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். SIR யை பொறுத்தவரை திமுக மிக கவனமாக கையாண்டு வருகிறது என்று கூறினார்.

தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ் செங்கோட்டையன் தினகரன் ஆகியோர் பேசியது தொடர்பான உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்வது சரியாக இருக்காது, எங்களைப் பொறுத்தவரை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார்.

ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் இங்கு வரும்பொழுது புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார், தங்க நகை தொழிலாளர்களின் பூங்கா கோரிக்கை நீண்ட நாள் கோரிக்கை தற்போது அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கூடிய விரைவில் அந்த கட்டிட பணிகள் முடித்து அவர்களுக்கு ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.

அவிநாசி மேம்பாலத்தை பொருத்தவரை அதிமுக ஆட்சிக்காலத்தில் 80 கோடி மட்டும்தான் செலவழித்து பணிகளை செயல்படுத்தி இருந்தார்கள் என்றும் பின்னர் அதிலிருந்த பல்வேறு வழக்குகளை முடித்து 1800 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் திமுகவின் கோட்டை என்று அமையும் வகையில் அந்த தேர்தல் அமையும் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் தொடர்பான கேள்விக்கு எங்களுடைய கட்சிகளைப் பற்றியும் எங்களுடைய செயல்பாடுகளை பற்றியும் கேளுங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளது ஒவ்வொரு கட்சியும் அவர்களது வேலையை செய்வார்கள் மற்ற அரசியல் கட்சிகள் என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்ப்பது எங்களுடைய வேலை அல்ல என தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றார்.

கோவையில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாய் இருக்கிறது என்ற கேள்விக்கு ஒரு சாலையின் ஆண்டு காலம் என்பது ஐந்து ஆண்டு காலம் கடந்த ஆட்சியில் சாலைகள் போடப்பட்டிருந்தால் இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சாலை போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றும் ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் சாலைகள் போடாததால் தற்பொழுது சாலைகள் போடப்பட்டு வருவதாகவும் விடுபட்ட சாலைகளும் தேர்தலுக்கு முன்பு போடப்பட்டு விடும் என தெரிவித்தார்.

அவிநாசி மேம்பாலம் விஷயத்தில் 50 சதவிகிதம் பணிகளை அதிமுக தான் முடித்தது என்று அதிமுகவினர் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு 1800 கோடியில் 50 சதவிகிதம் என்பது 80 கோடி தானா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் அந்த பாலத்திற்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டது என்று அவர்கள் ஆதாரத்துடன் கூறினால் நான் அதற்கு பதில் அளிக்கிறேன் என தெரிவித்தார்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp