Header Top Ad
Header Top Ad

கோவையில் நேற்று எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று எந்தப் பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு காணப்பட்டு வருகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisement

இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 7.70 மில்லி மீட்டர் மழை, பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மில்லி மீட்டர் மழை, மேட்டுப்பாளையத்தில் 8 மில்லி மீட்டர்,

Advertisement

பில்லூர் அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5.20 மில்லி மீட்டர், கோவை தெற்கு தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளில் 19.70 மில்லி மீட்டர், சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 மில்லி மீட்டர், வாரப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 23 மில்லி மீட்டர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 19.80 மில்லி மீட்டர்,

சிறுவாணி அடிவாரத்தில் 86 மில்லி மீட்டர், மதுக்கரை தாலுகாவில் 16 மில்லி மீட்டர், போத்தனூர் ரயில் நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் 12.40 மில்லி மீட்டர், பொள்ளாச்சி தாலுகா அலுவலக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 28.40 மில்லி மீட்டர்,

மக்கினாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 44.60 மில்லி மீட்டர், கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதிகளில் 26 மில்லி மீட்டர், ஆனைமலை தாலுகாவில் 39 மில்லி மீட்டர், அழியார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 28.40 மில்லி மீட்டர்,

சின்கோனா சுற்றுவட்டாரப் பகுதிகளில் 70 மில்லி மீட்டர், சின்னக்கல்லார் பகுதியில் 116 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 58 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 55 மில்லி மீட்டர், சோலையாரில் 61 மில்லி மீட்டர் என கோவையில் நேற்று ஒரே நாளில் 754.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் நேற்று 32.82 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தரவுகளின் படி வால்பாறையை அடுத்த சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 116 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News