கோவை: தேசிய கட்சிகளை தவிர்த்து விட்டு திராவிட கட்சி அரசியல் செய்ய முடியாது என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்…
முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர், 50 ஆண்டு காலத்திற்கு மேலாக அரசியலில் இருக்கிறார். அவரை அறிந்தவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் அவர் எதைப் பற்றி பேசினாலும் சிந்தித்து நிதானமாக பேசக்கூடியவர். அவர் சிந்திக்காமல் இதுவரை ஒரு பேட்டியோ அறிக்கையோ கொடுத்தது கிடையாது. அவர் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலே ஆங்கிலத்திலே பேசினார். அதை முழுமையாக கேட்டவர்களுக்கு அதன் அர்த்தம் நன்றாக தெரியும். சோசியல் மீடியாக்களில் வருகிற ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு, ஒரு உரையை முழுமையாக கேட்காமல் விமர்சனம் செய்யக்கூடாது. அவர் பேசியது என்ன? இந்திய அளவிலே இந்தி கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறதா ? வலிமையாக இருக்கிறதா என்று கேட்டால்? இல்லை, பாஜகவுக்கு நிகராக இல்லை என்று எதார்த்த உண்மையை, கள நிலவரத்தை எடுத்துச் சொன்னார். இந்திய அளவிலே அது வலிமையாக இல்லை என்று எடுத்து கூறும் போது, அது தமிழ்நாட்டில் வலிமையாக இல்லை என்று அர்த்தம் கிடையாது. தமிழகத்தை பொறுத்தவரை இண்டி கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. த
மிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகம் தலைமை தாங்குகிறது. அந்த கூட்டணிகளை காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. என்னை பொருத்தவரை வருகிற சட்டமன்றத் தேர்தலிலே, இண்டி கூட்டணி நிச்சயம் வெல்லும். பா. சிதம்பரம் கூறிய கருத்தை உள்வாங்கிக் கொண்டு, அவர் அந்த பேச்சிலே என்ன சொன்னார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டணி வலுவாக இருந்தால் தான் பாஜக என்று அரசியல் பின்பத்தை நம்மால் சமாளிக்க முடியும் என்று கூறினார். பாஜக ஒரு சாதாரண அரசியல் கட்சி கிடையாது அதற்கு ஒரு அரசியல் குணம் உண்டு என்று தான் கூறினார்.
இது அவருடைய அனுபவத்தில் நிதானமாக தெளிவாக கூறியிருந்தார். அந்த பேச்சை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாதவர்கள் தான் மேலோட்டமாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
1967-கு பின் நாங்கள் தேர்தலில் ஆட்சியிலேயே இல்லை. இது எதார்த்த உண்மை. இதை நான் மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஏன் இங்கு நேரடியாக ஆட்சியில் இல்லை, ஏன் தமிழ்நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக இல்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதைப் பற்றி பேச வேண்டும் என்றால் தனியாக ஒரு பேட்டியை கொடுக்க வேண்டும் என்றார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக வழக்கை ஒப்பிட்டு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு,
பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ, உறுதியான ஆதாரங்களை வைத்து தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எந்த ஒரு குற்றமாக இருந்தாலும், அவை நீதிமன்றத்திற்கு முன்பாக எடுத்துச் சென்று தண்டனை பெற்றுத்தர வேண்டும். சாட்சிகளின் அடிப்படையில் அதற்கான தண்டனையும் வரும் என நம்புகிறேன் என கூறினார்.
தமிழ்நாடு அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு,
இண்டி கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக இருக்கிறது, இந்த கூட்டணியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எதிரணிகளில் இருக்கக்கூடிய கூட்டணியை எடுத்துக் கொண்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, நான் எப்பொழுதுமே அவர்களின் கூட்டணியை குறைத்து மதிப்பிட்டது கிடையாது. அவர்களுக்கு எல்லா காலகட்டத்திலேயும் நல்ல வாக்கு வங்கி இருந்துள்ளது. இன்னுமே இருக்கிறது. ஆனால் அந்தக் கட்சி தற்போது பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது. ஆனால் அடிமட்ட தொண்டர்கள் அந்தக் கூட்டணியை விரும்பவில்லை என்பதை நான் கண்கூட பார்க்கிறேன்.
தற்சமயம் 2024 தேர்தலில் தான் அவர்களுடன் கூட்டணி வேண்டாம் என பிரிந்தோம் அதற்குள் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று அதிமுக தொண்டர்களை கூறுகிறார்கள். அதனால் அவர்களுக்கு இது பின்னடைவாக கூட இருக்கலாம். அதேபோல புதிதாக துவங்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெரியவில்லை. கூட்டணி வைப்பார்களா தனித்து போட்டியிடுவார்களா என்பது தெரியவில்லை.. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் விஜயின் கட்சிக்கு ஒரு புதிய எனர்ஜி இருக்கிறது. ஆனால் அந்த எனர்ஜி ஆக்கபூர்வமான அரசியல் கட்சியாக மாறி, தேர்தலை சந்தித்தால் மட்டும் தான் தெரியும். பாமக என்ன நிலை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.. இன்னும் தெளிவான கூட்டணி வரவில்லை.. என்னை பொருத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைகளான கூட்டணி வெற்றி பெறும் என்றுதான் நினைக்கிறேன் என கூறினார். அதேபோல புதிய கட்சியின் எனர்ஜியே வாக்கு வங்கியாக மாறும் என்பதை எப்பொழுதும் சொல்ல முடியாது. இது பற்றிய தற்போதைய சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது அதை வெளிவரும் போது அதை பற்றி தெரியும் என கூறினார்.
காஷ்மீர் தாக்குதல் குறித்த கேள்விக்கு,
முதலில் இதை சாதாரண பயங்கரவாத தாக்குதலாக யாரும் பார்க்கக்கூடாது. இதுவரை இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் வருவார்கள், குண்டு வைத்த அங்க அங்க சுட்டு விட்டு சென்று விடுவார்கள். ஆனால் பகல் காமில் மதரீதியாக பிரித்து இந்துக்களை மட்டுமே குறிவைத்து சுட்டு இருக்கிறார்கள். இதை சாதாரண தீவிரவாத செயலாக பார்க்க முடியாது. ஆனால் இதற்கு நம் அரசாங்கம் கொடுத்திருக்கும் பதிலடி சரியான பதிலடியாகத்தான் இருக்கிறது. இந்தியாவின் முப்படைகள் எடுத்த நடவடிக்கைகள் முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டியவை. அதேபோல பேச்சுவார்த்தை என்பதும் கூட ராஜாங்க ரீதியாக யார் யாரிடம் பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்.
ஆனால் நம்முடைய போர் நிறுத்தத்தை முதலில் அமெரிக்க அதிபர் தான் அறிவித்தார். அது ஏன் அப்படி அறிவிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதற்கு அரசாங்கம் ஒரு தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும். நேற்று நடைபெற்ற வெளியுறவுத்துறை கூட்டத்தில் அதற்கான விளக்கத்தை அவர்கள் கொடுத்ததாக தெரிகிறது. நாங்கள் இதற்கு தெளிவாக விளக்கம் கிடைக்கும் என்று தான் பாராளுமன்றத்தை கூட்ட கேட்கிறோம். ஆனால் இதை விளக்க வேண்டிய இடத்தில் அரசாங்கம் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் செய்தித்தாள்களில் படித்து தான் தெரிந்து கொள்கிறோம். இதை உண்மையாகவே தெளிவாக அதை அவர்கள் விளக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் சொல்ல வேண்டியது அவசியமல்ல, எதையெல்லாம் கூற வேண்டுமோ அதை நிச்சயம் கூற வேண்டும் என்று கூறினார்.
அரசியல் குழுக்கள் அமைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பரப்புரை செய்வதாக கூறியிருக்கிறார்களே என்ற கேள்விக்கு,
இதை நான் முழுமையாக வரவேற்கிறேன், இதுபோல பல்வேறு அரசியல் தலைவர்கள் கொண்ட குழுவை 50 நாடுகளுக்கு அனுப்பி, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்து கூறுவதை நான் வரவேற்கிறேன். அரசாங்கம் யாரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பதில் சில சர்ச்சைகள் இருக்கிறது. இதற்கு அரசாங்கம் எங்களுடைய நிலையை விளக்குவதற்கு யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்களை அழைத்து இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். சில காட்சிகள் நாங்கள் கூறுபவர்களை தான் நீங்கள் அனுப்ப வேண்டும் என கூறியிருக்கிறார்கள்..
என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் அரசியல் செய்ய தேவையில்லை. இது தேசிய பாதுகாப்பு விஷயம், இதில் அரசியல் செய்யாமல் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து அனைத்து பிரதிநிதிகளும் அனைத்து நாடுகளுக்கும் செல்வது இந்தியாவின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர் ஊழல் குறைந்துவிட்டது என்று பாஜக சொல்வது பொய்யாக இருக்கிறது. அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஊழல்கள் எழுதப்படாமல் இருக்கலாமே தவிர ஊழல் குறைந்து விட்டதாக சொல்ல முடியாது என்றார்.
எல்லா கட்சிகளிலுமே தேர்தல் நிக்கும் பொழுது, நிறைய பிரதிநிதிகள் வரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதேபோல காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அரசாங்கத்தில் பங்கேற்க வேண்டும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும் மந்திரிகள் ஆக வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆந்திராவை எடுத்துக் கொண்டால், சந்திரபாபு நாயுடுவை எடுத்துக் கொண்டால் அவருக்கு மெஜாரிட்டி கிடைத்தது, ஆனால் அவர் கூட்டணியில் இரு கட்சிகளை சேர்த்துக்கொண்டார்.
அதேபோல தேசிய கட்சிகளை தவிர்த்து விட்டு திராவிட கட்சி அரசியல் செய்ய முடியாது. ஏதாவது ஒரு தேசிய கட்சியோடு இணைந்தால்தான் திராவிட கட்சிக்கு வாக்கு வங்கி வலுவாக இருக்கிறது. தேசியக் கட்சிகளை நிராகரித்துவிட்டு தமிழ்நாடு அரசியல் செய்ய முடியாது. முன்னர் ஒரே ஒரு தேசிய கட்சி தான் பிரதானமாக இருந்தது, இப்பொழுது இரண்டு கட்சிகள் உள்ளது. இவைகளை தவிர்த்து விட்டு மாநில கட்சிகள் மட்டும் அரசியல் செய்ய முடியாது என்று கூறினார்.
நீங்கள் பேசும்போது எனக்கு ஹிந்தி வராது டெல்லிக்கு சென்றாலும் ஹிந்தி வராது என்று கூறினீர்களே என்ற கேள்விக்கு,
எனக்கு வயதாகி விட்டது ஹிந்தி படிக்கவில்லை அதனால் ஹிந்தி தெரியாது. தற்போது எனக்கு ஹிந்தி படிக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை. சிலருக்கு மொழி படிப்பதற்கு சுலபமாக இருக்கும் எனக்கு அது சுலபமாக இருக்காது அவ்வளவுதான். அதை நான் என்னுடைய குறையாக தான் பார்க்கிறேன் என்றார்.
அதிமுக பாஜக கூட்டணியில், பாஜக தமிழகத்தில் அதிக இடங்களை கேட்டிருப்பது போல காங்கிரசும் அதற்கு தகுந்தார் போல் இடங்களில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு..
எங்களின் கூட்டணி வேறு அவர்களின் கூட்டணி வேறு, 234 இடங்களுக்குள் எவ்வளவு பகிர்ந்து கொள்ள முடியுமோ அவ்வளவுதான் பகிர்ந்து கொள்ள முடியும். எங்களுக்கு எவ்வளவு சீட் தேவையோ அவைகளை வாங்கி போட்டு விடுவோம் அவ்வளவுதான். அவர்கள் அங்கு என்ன பேசுகிறார்கள் என்பதை பொறுத்து நாங்கள் இங்கு எப்பொழுதும் பேச மாட்டோம் என்று கூறினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குள் கோஷ்டி மோதல் இருந்து கொண்டே இருக்கிறது என்ற கேள்விக்கு,
எங்களுடைய கட்சியில் நிறைய ஃபண்டமெண்டல் பிரச்சனைகள் இருக்கிறது, எங்களிடமும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. நாங்கள் ஆளுங்கட்சிக்கு கூட்டணி கட்சியாக தேர்தலில் இருக்கிறோம், ஆனால் அதற்குப் பிறகு அரசாங்கத்தில் நாங்கள் பங்கெடுப்பதில்லை. ஆக்கபூர்வமான அரசியல் கட்சியாகவும் இல்லை ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாகவும் இல்லை.. இதுவே ஒரு பிரச்சனை.. இங்கு முதலமைச்சர் என்று ஜே கே மூப்பனாரை முன்னிறுத்தியத்திற்கு பின்பு இங்கு யாரையும் முன் நிறுத்த முடியவில்லை.. நாங்கள் தேசிய அளவிலான பிரச்சனைகளை முன்னிறுத்துகிறோமே தவிர தமிழ்நாட்டு அளவிலான பிரச்சனைகளை முன்னிறுத்தவில்லை. முதலில் இதையெல்லாம் சரி செய்தால் மட்டும் தான் கோஷ்டி மோதல் இருக்காது என்று கூறினார். நீங்கள் யாரை தலைவராக போட்டாலும் ஒரு சிறிய வட்டத்திற்குள் தான் அவர்கள் செயல்படுகிறார்கள். அந்த வட்டத்திற்குள் செயல்படும்போது இவ்வளவுதான் செய்ய முடியும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டால்தான் வேறு ஏதாவது செய்ய முடியும் என்று கூறினார்.
புதிதாக வந்த அரசியல் கட்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பாரம்பரியமாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லையே என்ற கேள்விக்கு,
எங்களுடைய பலம் என்ன என்பதை எங்களுக்கு தெரியும், எங்களுக்கு என்ன பலம் என்பதை அறிந்து தான் சீட்டு கேட்க முடியும். டேட்டாவை வைத்து தான் முடிவு செய்து கொள்ள முடியும். ஆசை இருக்கிறது என்பதற்காக பலத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்றார். குறைபாடுகளை சொல்வதாலேயே கூட்டணிக்குள் விரிசலோ, நடைமுறைத்துக் கொள்ள வேண்டும் என்பதோ கிடையாது. மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. சில சமயங்களை நாங்கள் அதை செய்வது கிடையாது. அதுதான் பிரச்சனையாக உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், பிஜேபி ஆட்சிகள் இல்லாத மாநிலங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறாரே என்ற கேள்விக்கு,
சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்டை நான் வரவேற்கிறேன், மத்திய அரசாங்கம் ஜனாதிபதி மூலமாக உயர் நீதிமன்றத்திற்கு ஒரு ரெஃபரன்ஸ் கேட்டிருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது. சில கேள்விகளுக்கு அவர் பதிலும் சொல்லியிருக்கிறார் சிலருக்கு சொல்லாமலும் இருக்கிறார். ஆனால் முதலமைச்சர் மற்ற மாநிலத்திற்கு எழுதிய கடிதத்தை நான் வரவேற்கிறேன் என கூறினார்.