கோவை: கோவையில் போதையில் வட மாநில வாலிபர்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக்கொண்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் பல்வேறு தொழில்கள் உள்ளன. இங்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணி புரிந்தும் வருகின்றனர்.
மேலும், இளைஞர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடுதிகள் மற்றும் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி வசித்து வருகின்றனர்.
இதேபோல், ரத்தினபுரி செக்கான் தோட்டம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில வாலிபர்கள் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று அவர்கள் அங்கு மது அருந்திவிட்டு, போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், அங்கிருந்த பெண்ணையும் தாக்கியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து ரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் அங்கு சென்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட மாநில வாலிபர்களால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறும் முன், போலீசார் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வீடியோ காட்சிகள்
கோவை ரத்தினபுரியில் வடமாநில இளைஞர்கள் மோதல் #Coimbatore pic.twitter.com/TVfgKVj4Cp
— News Clouds Coimbatore (@newscloudscbe) August 11, 2025