அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்கு பெட்டி…

கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மனுக்கள் அளிப்பதற்கு மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆகையால் தமிழ்நாடு அரசின் முதல்வரின் முகவரித்துறையின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது, இந்திய தேர்தல் ஆணையத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப்பெறப்படுவது தொடர்பான மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை தபால் மூலமாகவோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை இட்டுச்செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டது. மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள் அவர்களது மனுக்களை அந்த பெட்டியில் இட்டு செல்லலாம். அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு புகார் பெட்டி நிறைந்த உடன் அவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைப்பார்கள்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை…

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம்...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.