Header Top Ad
Header Top Ad

கோவையில் வேலைவாய்ப்பு முகாம்…

கோவை: கோவையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.

Advertisement
Lazy Placeholder

இதில், 250க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 15,000க்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் டிப்ளமோ, நர்சிங், பட்டப்படிப்பு, பொறியியல், பார்மசி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Lazy Placeholder

கோவை நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் மார்ச் 22ம் தேதி இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் முன்பதிவு செய்வது கட்டாயம். இது குறித்த விவரங்களுக்கு 0422-2642388, 9499055937 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அல்லது, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

கோவைக்கான அரசு அறிவிப்புகள், மின்தடை அறிவிப்புகள், செய்திகளை அறிந்து கொள்ள News Clouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம் 👇

Recent News

Latest Articles