Header Top Ad
Header Top Ad

வின்சென்ட் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

கோவை: உக்கடம் வின்சென்ட் ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாநகரில் பெரிய கடை வீதி சாலையையும், உக்கடத்தையும் இணைக்கும் பிரதான சாலையாக வின்சென்ட் சாலை உள்ளது. சுமார் 1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன.

இதனிடையே இந்த சாலையின் இருபுறமும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடை அமைத்து ஆக்கிரமித்து வைத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வின்சென்ட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Advertisement

இதனால் தற்போது அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் சற்றே குறைந்துள்ளது.

Recent News