கீழடி ஆய்வுகள் குறித்தான கேலி சித்திரம்- மக்கள் தண்டனை வழங்குவார்கள் என கோவையில் ஈபிஎஸ் பதில்

கோவை: கீழடி குறித்து திமுகவினர் பதிவிடும் கேலி சித்திரத்திற்கு மக்கள் தண்டனை வழங்குவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவாகவும் விளக்கமாகவும் பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார். அம்மா (ஜெயலலிதா) இருக்கின்ற பொழுது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது அவரது மறைவிற்குப் பிறகு அவருடைய அரசு எவ்வாறெல்லாம் ஈடுபட்டது என நேற்றைய தினமே தெரிவிக்கப்பட்டு விட்டது என கூறினார்.

முருக பக்தர் மாநாட்டிற்கு அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விரும்புகின்ற தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை என்றும் அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புகின்ற கடவுள்களை வழிபட இந்த மாநாட்டின் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள் என்றும் அந்த முருக பக்தர் மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும் என்று அமித்ஷா பேசியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், அமிஷ்தா அவருடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்றும் அதே சமயம் அனைவருக்கும் அவரவர் தாய்மொழி முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தாய்மொழிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தான் அவர் அந்த கருத்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பு எழுந்துள்ளதாகவும் மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டே இருப்பதாகவும் அதனை மறைப்பதற்காக மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரங்களை வெளியிட்டு அவதூறு செய்திகளை பரப்புவதாகவும் இதற்கெல்லாம் 2026 இல் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவார்கள் என தெரிவித்தார்.

யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று அதனை பிரதமர் முன் நின்று நடத்துகிறார் அதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துச் சென்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.