கோவை: இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக ஒ.இ மில்களின் தயாரிப்புகள் அதிகளவில் ஏற்றுமதியாகும் என்று ஓஸ்மா (OSMA) சங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஓஸ்மா (Open End Spinning Mills Association – OSMA) சங்கத் தலைவர் அருள்மொழி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்ற FTA ஒப்பந்தம் இந்திய ஜவுளித்துறை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதனால் OE மில் (கழிவுப் பஞ்சாலை) நூல்களில் இருந்து உற்பத்தி ஆகும் ஜவுளி பொருட்களான துண்டு வகைகள், திரைச் சீலைகள், மெத்தை, தலையணை விரிப்புகள், தரை விரிப்புகள், காடா துணி வகைகள், திருப்பூர் பின்னலாடை துணி வகைகள், கரூர் made-ups போன்ற ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்.
தற்போது 10,000 கோடி ஆண்டு ஏற்றுமதி, 30,000 கோடி ஆண்டு ஏற்றுமதியை எட்டும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்ததை செய்து கொடுத்த பிரதமர் மோடி, வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அருள்மொழி தெரிவித்துள்ளார்.