கோவை: நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் பொதுமக்களும், விவசாயிகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் எப்படி ? போராட்டம் நடத்துவது என்பது குறித்துத் விவசாயிகள் மாநில மகாசபை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தின் தலைமையில், SKM (NP) – சம்யுக்த கிசான் மோர்சா (நேஷனல் பிளாட்பார்ம்) சார்பில், தமிழக விவசாயிகள் மாநில மகாசபை கூட்டம் கோவை மாவட்டம், பேரூரில் உள்ள யாதவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்று உள்ளனர்.
இந்த கூட்டத்தில் நொய்யல் ஆற்றை பாதுகாக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து எதிர்காலத்தில் நடைபெற வேண்டிய போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் SKM (NP) தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு ஆகிய 15 க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான விவசாயத் தலைவர்கள் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் பங்கேற்று இருந்தனர்.