SIR படிவம் நிரப்புதல்- பொதுமக்களுக்காக கோவை ஆட்சியர் அறிவித்த மகிழ்ச்சியான உத்தரவு…

கோவை: SIR படிவம் நிரப்புவதில் சந்தேங்களை களைய ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மாலை வரை இருந்து, நிவர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதில், பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, பள்ளி வேலை நாட்களில் மாலை 3 முதல் 6 மணி வரை, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இருந்து, நிவர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு வினியோகித்த படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, திரும்ப பெறப்படுகின்றன.

2002/2005 பட்டியல் திருத்தப்பணி செய்தபோது, வாக்காளராக இருந்திருந்தால், அதைப்பற்றிய தகவலும், இல்லாமல் இருந்தால் தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டி போன்ற உறவினர்கள் எந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்கிற விபரம் முக்கியமாக கேட்கப்படுகிறது.

இந்த விபரங்களை அனைத்து தரப்பு வாக்காளர்களாலும் நிரப்ப முடிவதில்லை பலருக்கும் படிவத்தை பூர்த்தி செய்யத் தெரியாததால், உதவி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பள்ளி வேலை நாட்களில் மாலை 3 முதல் 6 மணி வரை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இருந்து கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்யவும், வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் வேண்டும் பூர்த்தி செய்த படிவங்களை, அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp