கோவை: ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் என்று கூறி கோவையில் பெண் ஒருவரிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் 50 வயது பெண். ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இவரது வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு மெசேஜ் வந்துள்ளது.
இதனை நம்பிய அவர், பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.8.65 லட்சத்தை முதலீடு செய்தார். பின்னர் பணத்தைத் திரும்ப எடுக்க முயன்றார். அப்போது, மேலும் பணத்தைச் செலுத்தினால் மட்டுமே முதலீடு செய்த பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மோசடி

சுதாரித்துக்கொண்ட அந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி,மோசடியில் ஈடுபட்ட கோவா மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (37) என்பவரைக் கைது செய்தனர்.

ஆன்லைன் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.