கோவை: நாளை முதல் நான்கு நாட்களுக்கு மருதமலை மலைக்கோவிலுக்கு வாகனங்களில் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு நான்கு சக்கர வாகனங்களில் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள மருதமலை, சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாளை 15.01.2026 முதல் 18.01.2026 வரை பொங்கல் திருநாள் மற்றும் தொடர் விடுமுறை காலமாக இருப்பதால் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இரண்டு சக்கர வாகனங்கள் வழியாகவும், மலைப்படிகள் வழியாகவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.
விழாவிற்கான முன்னேற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் துணை ஆணையர் செயல் அலுவலர் ஆகியோர்களால் செய்து வருகின்றனர் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

