கோவையில் தமிழர் உடை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வெளிநாட்டு மாணவர்கள்

கோவை: கோவையில் வெளிநாட்டு மாணவிகள் சேலை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கோவை மாவட்டம் அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கல்லூரி வளாகத்தில் வண்ணக் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு கடவுளை வழிபட்டனர்.

தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். மைதானத்தின் நடுவே வைக்கப்பட்ட பொங்கல் பானையைச் சுற்றி நின்று, கும்மியடி பெண்ணே கும்மியடி என்ற பாடலுக்கு கும்மி நடனம் ஆடினர்.

இதில் கல்லூரியில் பயிலும் சிரியா நாட்டைச் சேர்ந்த மாணவிகளும் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று கும்மி நடனடத்தில் பங்கேற்றனர்.

வெளிநாட்டு மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம் அளிக்கிறது- வானதி சீனிவாசன் பேட்டி…

கோவை: விஜய் திரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம் அளிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பெண்களின் வங்கிக் கணக்கில்...

Video

ஆஃபர் என்ற பெயரில் பழைய அதிரசம்; ஆனந்தாஸ் உணவகத்தை விளாசிய வாடிக்கையாளர்! – வீடியோ

கோவையில் 50% சலுகை பெயரில் பழைய அதிரசம் விற்றதாக ஆனந்தாஸ் உணவகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Join WhatsApp