கோவை: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது.
கோவையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் (ஜூன் 9) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.71,640க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.71,560க்கு விற்பனையானது. இதனிடையே தங்கம் விலை இன்று விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.
Advertisement

கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.600 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.440 உயர்ந்த நிலையில், இன்று ஒரு பவுன் ரூ.59,320க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.119க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ,1,19,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
