கோவை: இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.8,945க்கு விற்பனை செய்யப்பட்டது.
அடுத்தடுத்த நாட்களில் விலை உயர்வைச் சந்தித்து நேற்று கிராம் ரூ.9,305க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே இன்று கிராமுக்கு ரூ.105 குறைந்துள்ளது. கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9,200க்கும், ஒரு பவுன் ரூ.73,600க்கும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.7,575க்கும், ஒரு பவுன் ரூ.60,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வந்த வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.120க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
