Gold rate today in coimbatore: தங்கம் விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த இரண்டு மாதங்களில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன.
கோவையில் இன்று ஒரே நாளில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.8,640 விலை அதிகரித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் கோவையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.12,765 க்கு விற்பனையாகி வந்தது. இதனிடையே இன்று 16,395 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,080 விலை உயர்ந்து, ஒரு கிராம் 16,395 ரூபாய்க்கும், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1,31,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 903 ரூபாய் உயர்ந்து, இன்று ஒரு கிராம் 13,675 ரூபாய்க்கும், ஒரு பவுன் ரூ.1,9,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விளையும் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 25 ரூபாய் அதிகரித்து, கிராம் 425 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

