கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

கோவை: கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு போலீஸ் நிலைய பகுதியில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி 20 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஆனந்தகுமார் (27), நரேஷ்குமார் (35) மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜான்(31) ஆகியோர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆனந்தகுமார், நரேஷ் குமார் மற்றும் ஜான் ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கலெக்டர் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான ஆனந்தகுமார், நரேஷ் குமார், ஜான் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Recent News

Video

Join WhatsApp