கோவையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்- அதே ஆசிரியர்கள் தான் வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை…

கோவை: அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள்
கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் இந்த வருடம் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார் 200 மேற்பட்டோர் உள்ளனர்.

இந்த நிலையில் அக்கவுண்டன்சி மற்றும் வேதியல் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சாந்தி மற்றும் சத்யா ஆகியோர் திடீரென பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டதால் படிப்பு பாதிக்கப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தின் காரணமாக மிகவும் பாதிக்கபட்டு உள்ளதாகவும் எனவே பணியிட மாற்றம் செய்யபட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் தங்களது கல்வியின் நலன் கருதி மீண்டும் அவர்களை அதே பள்ளியில் பணியமர்த்த செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp