கோவை ஈஷாவில் கிராமோத்சவம் நிகழ்ச்சி- ஏராளமான போட்டிகள்- அனுமதி இலவசம்!!!

கோவை: கோவை ஈஷாவில் வருகின்ற 21ம் தேதி நடைபெற உள்ள கிராமோத்சவம் இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்க உள்ளார்.

ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும் பிரபல கவிஞருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 17-வது ஈஷா கிராமோத்சவம் 2025 போட்டியில் 6 மாநிலங்கள்,1 யூனியன் பிரதேசம் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டியானது கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள்,தூய்மை பணியாளர்கள், மீனவர்கள்,தினக்கூலித் தொழிலாளர்கள்,இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது.ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்
ஈஷா கிராமோத்சவ போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும்.

இந்நிலையில் 6 மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாம் கட்ட இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன.இதில் 24 வாலிபால் அணிகளும்,18 த்ரோபால் அணிகளும் பங்கேற்க உள்ளன. முன்னதாக அரையிறுதிப் போட்டிகள் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும்.இதனுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டியும் நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு 5 லட்சம் ரூபாய்,3 லட்சம் ரூபாய்,1லட்சம் ரூபாய்,50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன.போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படுகின்றன.

கிராமிய கலை நிகழ்ச்சிகள்
இந்த திருவிழாவில் விளையாட்டுப் போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின், வள்ளி கும்மி,ஒயிலாட்டம்,தெருக்கூத்து கேரளாவின் பஞ்சரி மேளம்,செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம்,கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இதனுடன் 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுகளின் பிரத்யேக அரங்குகளும் இடம் பெற உள்ளது.

வண்ண கோலப் போட்டி
மேலும் பொது மக்களுக்கான வண்ண கோலப் போட்டி மற்றும் பல்லாங்குழி, மணி நடை,வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உட்பட 25க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம். கோலப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு சத்குருவிடமிருந்து 33,000 ரொக்கப் பரிசு பெறும் வாய்ப்பு உள்ளது கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு புடவை பரிசாகவும் வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.