கல்லறைத் திருநாள்- கோவையில் முன்னோர்கள் கல்லறையில் சிறப்பு பிரார்த்தனை…

கோவை: கல்லறை திருநாளையொட்டி கோவையில் பல்வேறு கிறிஸ்துவர்கள் முன்னோர் கல்லறைகளில் பிரார்த்தனை செய்தனர்.

கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள கல்லறை தோட்டத்தில் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.

அந்த வகையில் கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கல்லறை தோட்டத்தில் ஆயர் அருட்திரு. ஜெ. விகேஷ் மார்க்கஸ் ஜெபத்துடன் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவ மக்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் ,முன்னோர்களின் கல்லறையை சீரமைத்து அலங்கரித்து மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் முன்னோர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp