கோவையில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி முகாம்…

கோவை: ஹஜ்யாத்திரை செல்வோர்க்கு தமிழக அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கோயம்புத்தூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் 2.02.2026 முதல் 7.02.2026 வரை 6 நாட்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில், சர்க்கரை அளவு பரிசோதனை, கல்லீரல் செயல்திறன் பரிசோதனை, (LFT)சிறுநீரக செயல்திறன் பரிசோதனை (KFT) மார்பக X-Ray மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் Meningococcal, and Seasonal Influenza Vaccine ஆகிய தடுப்பூசி மருந்துகளும் செலுத்தப்படவுள்ளது. மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட 37நபர்களுக்கு மட்டும் Seasonal Influenza Vaccine பிரத்யேகமாக செலுத்தப்படும்.

இம்முகாமில் நாளொன்றுக்கு தலா 50 யாத்திரிகர்கள் வீதம் 6 நாட்களுக்கு 300 யாத்திரிகர்கள் பயன்பெறுவர் என கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வெள்ளியங்கிரி மலைகோவில் பாதை திறக்கப்பட்டது…

கோவை: தை மாத பெளர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு செல்லும் பாதை திறக்கப்பட்டது. தென் கைலாயம் என அழைக்கப்படும் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோவிலுக்கு செல்லும் நடை இன்று சிறப்பு...

Video

Join WhatsApp