ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்- கோவையில் நயினார் நாகேந்திரன் தெரிவிப்பு

கோவை: ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் தனக்கு சந்தோஷம் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி அவர் வந்தால் எனக்கு சந்தோசம் என பதில் அளித்தார்.

Advertisement

ஒரே மேடையில் எடப்பாடி பழனிச்சாமியும்,
டிடிவி தினகரனரும் பங்கேற்பார்களா என்ற கேளவிக்கு, தினகரனிடம் நான் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.
தினகரன் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்.நீங்கள் நினைப்பதை போல வெகுவிரைவில் எல்லோரும் ஒரே மேடையில் ஏறுவோம் என தெரிவித்தார்.

டிடிவி பெயரையும், அவரது கட்சி பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி சொல்லாமல் தவிர்பது குறித்த கேள்விக்கு , முறையாக சில ஏற்பாடுகள் முடிந்த பின்னர் எல்லாருடைய பெயரையும் சொல்வார் என கூறிய நயினார் நாகேந்தின்,திமுக தோல்வி பயத்தில் இருக்கின்றனர் என்றும் திமுக கூட்டணி வலுவாக இருப்பதைப் போல மாயை உருவாக்கி இருக்கின்றனர் என்றும் கூறினார்.

Advertisement

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ,கொலை கொள்ளை கஞ்சா கடத்தல், போதை பொருள் நடமாட்டம் என
அதிகரித்துள்ளதாகவும் வழக்கமாக ஆளுங்கட்சிக்கு 10 சதவீதம் எதிர்ப்பு இருக்கும் ஆனால் இந்த ஆட்சியின் மீது 100 சதவீதம் எதிர்ப்பு மக்களிடம் இருக்கிறது என்றும் விமர்சித்தார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அவரிடம் சுயமரியாதை முக்கியம் என ஓபிஎஸ் கூறியிருப்பதாகவும் ஓபிஎஸ் அவர்களின் சுயமரியாதை பாதிக்கக் கூடிய அளவிற்கு என்ன செய்தீர்கள் என செய்தியாளர் கேள்வி எழுப்பவே எல்லோருக்கும் சுயமரியாதை முக்கியம். உங்களுக்கும் முக்கியம். எனக்கும் முக்கியம் என்றும் வெகு விரைவில் நீங்கள் நினைப்பது போல நடக்கும் எனவும் பதிலளித்து சென்றார்.

Recent News

நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்- இ- பாஸ் பதிவு செய்ய லிங்க் இதோ..

கோவை: நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வருகின்ற...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp