கோவை: கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
கோவையில் வெப்பம் வாட்டி வரும் நிலையில், கடந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்தது. அதன் பிறகு மழை குறைந்து மீண்டும் வெப்பம் அதிகரித்தது.
இந்த நிலையில், இன்று முதல் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று, கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் , கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவை வானிலை
கோவை மற்றும் மேற்கு மண்டல மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.